Wednesday, September 12, 2012

வெட்கம் கெட்ட வெருளியனின் வேண்டாத வேலை...!


எம்மை பற்றி அவதூறு பரப்பும் கேவலம் கெட்ட ஓர் ஆனந்த விகடன் ஊடகவியலாளனின் பதிவு இது. இத நம்பாதீங்க. 
பார்க்க http://aruliniyan.blogspot.com/2012_06_01_archive.html


JPL [JAFFNA PREMIER LEAGUE] இல் கோவணம் தூக்கிய நண்பர்களுக்கும் , அறிவிப்பாளர்களுக்கும் மேலும் சில பெரிசுகளுக்கும் சில கேள்விகள்




1]நீங்கள் நடன மங்கையருடன் ஆட்டம் போட்ட யாழ் இந்துக் கல்லூரி கடந்த நூறு ஆண்டுகளாக தமிழனின் அடையாளம் ஆக இருப்பது உங்களுக்கு தெரியுமா..............?    

2]போர் முடிந்து முழுதாக மூன்று வருடங்கள் கழிந்த பின்பும் இன்னமும் அகதி முகாம்களில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத கேவலமான வாழ்க்கை வாழ்பவர்கள் சுமார் 50,000 என்பது உங்களுக்கு தெரியுமா....?

3]லட்சக்கணக்கில் செலவழித்து JPL கொண்டாடும் நீங்கள் முகாமிலே உள்ள மக்களை எக் கணத்தில் ஆவது சிந்தித்துப் பார்த்தது உண்டா...?,எந்த சந்தர்பத்தில் ஆவது அவர்களை முகாமை விட்டு வெளியில் எடுத்து அவர்களும் சாதாரண மக்கள் போல நோர்மலான வாழ்க்கை வாழ எதாவது செய்ய வேண்டும் என நினைத்தது உண்டா...?

4]முகாமில் இருந்து வெளியேறிய மக்களிலும் சுமார் 1  லட்சம் வரையானவர்கள் கிளிநொச்சி , முல்லைத்தீவில் அடுத்த நேர உணவிற்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்கிற நிர்வாண உண்மை உங்களுக்கு தெரியுமா..?,தெரிந்து இருந்தால் நடன மங்கையருடன் கூத்தடிக்க உங்களுக்கு மனம் வருமா.......?

5]ராணுவம் சூழ   இந்துக் கல்லூரியில்  நடை பெற்றது உங்களின் JPL,எமது இந்துக் கல்லூரியில் இருந்து எமது மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக போராட்டத்திற்கு சென்று இறந்து போன அப்பாவி வாலிபர்களின் எண்ணிக்கை குறைந்தது ஆயிரம் என்றாவது தெரியுமா....?,அவர்கள் எதற்காகப் போராடினார்களோ எதற்காக எவனும் எந்த சந்தர்பத்திலும் கொடுக்க முன்வராத உயிரைக் கொடுத்தார்களோ  அதில் ஒன்றை கூட அடையாமல் ,அவர்களின் நினைவுகளை இன்னமும் சுமந்து கொண்டிருக்கின்ற யாழ் இந்தக் கல்லூரி மைதானத்தில் இராணுவத்தினர் புடைசூழ உங்களால் எப்படி மனசாட்சி சிறிது இல்லாமல் விழா நடத்த முடிந்தது............? ,நடன மங்கையருடன் ஆட்டம் போட முடிந்தது.............? 

6]   இராணுவத்தினர் புடைசூழ நடனமங்கையருடன் நடந்த உங்களின் கோதாரி JPL இன் புகைப் படங்கள் தெளிவாக திட்டம் இட்டு சர்வதேசம் எங்கும் பரப்பப்படுவதுடன் , ஈழப் போரில் இனப் படுகொலை செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சம் பேரும்  தற்கொலை தான் செய்தார்கள் என்கிற ரேஞ்சுக்கு பக்கா பிராடு  செய்தியை இலங்கை அரசு , அரச சார்பு ஊடகங்களின் உதவியுடன் பரப்பி வருவது உங்களுக்கு தெரியாதா...? 





7]நடன மங்கைகளுடன் இந்து அன்னையின் மைதானத்தில் நாட்டியம் போட்ட போது , எமது மக்களுக்காக நீர் கூட அருந்தாது உண்ணா விரதம் இருந்து மெழுகு திரிபோல உடலின் ஒவ்வொரு கலமும் துடிக்க துடிக்க இறந்து போன இந்துவின் மைந்தன் திலீபன் ஆவது உங்களுக்கு  நினைவு வரவில்லையா................?

8]ஈழத் தமிழர்களுக்கு எந்த விதமான உரிமையும் இன்னமும் கொடுக்கப்படாத நிலையில்[அட்லீஸ்ட் பதின் மூன்றாவது திருத்த சட்டம்]   , சிங்கள அரசியல்வாதிகளுடனும் [அர்ஜுனா ரணதுங்கா ஒரு அரசியல் வாதி ]ராணுவத் தினருடனும் சேர்ந்து நாம் எப்படி கூத்தடிப்பது.................. 
..?

9] கல்வியால் மாத்திரம் தான் நாம் இழந்த பெருமையை பெறலாம் என்பது அடிப்படை யதார்த்தம் ,அசுர குணத்தில் இருக்கும்  எமது அடுத்த சந்ததியை கல்வியை நோக்கி திருப்ப வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லையா..........?,இருந்தால் நடனப் பெண்கள் என்கிற புதுப் பாணி கலாச்சாரத்தை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி , எமது இளம் சந்ததியை பார்வையை இன்னமும்  கல்வியில் இருந்து தூரச் செல்ல வைப்பீர்களா............? 

10]எமது இளம் சந்ததியை கெடுப்பதற்கு என்றே சிங்களப் பேரினவாத அரசாங்கம் திட்டம் இட்டு போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்தில் இளம் சந்ததி இடையே அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்தது அதன் ஒரு நீட்சி தான்   உங்களின் "நடனப் பெண்கள்" என்கிற அடிப்படை அறிவு / தெளிவு உங்களுக்கு இருக்கா..............?

11]சமூகத்தில் வயதில் மூத்த நீங்கள் அடுத்த சந்ததிக்கு நல் வழி காட்டாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை கலாச்சாரக் கற்பழிப்பு செய்து கெடுக்கலாமா............? 
 
12]'JPL' பின்னால் உள்ள அரசியல் மெய்யாலும் விளங்கவில்லையா இல்லை விளங்காதது போல நடிக்கிறீர்களா...........? 
 
13]ஏன் நண்பர்களே நாம் இழந்தது இன்னும் போதாதா...........?, இன்னும் இழக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்களா.........?

No comments:

Post a Comment