யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – யுகே யின் தலைவர் க செவ்வேள் யாழில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். பெரும்பாலும் ஆளும்கட்சியின் பட்டியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட க செவ்வெள் தற்போது சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அல்லது களம் இறக்கப்பட்டு உள்ளார்.
தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்தும் க செவ்வேள் லண்டனில் சட்டத்தரணி அல்ல என்றும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார்.ஆனால் க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருந்தார். இவர் படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த வேளையில் இவரது பொறுப்பில் இருந்த அரசியல் தஞ்ச வழக்குகள் சில பாதிக்கப்பட்டு இருந்தது.
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவரான இவர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு விசனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அது அவருடைய அரசியல் தெரிவு என்ற அடிப்படையிலும் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்ற கடப்பாட்டை கொண்டிராததால் க செவ்வேளிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
க செவ்வேளை விடவும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் அருளர், முன்னால் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் கிறிஸ் சரவணன் ஆகியோரும் லண்டனில் இருந்து சென்று தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
இந்த கருத்து “புலத்தில் வேகாத பருப்புகள் இலங்கைத் தேர்தல் களத்தில்“ என்ற தலைப்பில் பிரபல புலம்பெயர் ஊகவியலாளர் த,ஜெயபாலன் அவர்களால் லண்டன் குரல் க்காக MARCH 25, 2010 அன்னு எழுதப்பட்ட கட்டுரையாகும்.
இதன் இணைய இணைப்பை படிக்க
இங்கு க்ளிக் செய்யவும்.
நன்றி.