எம்மை பற்றி அவதூறு பரப்பும் கேவலம் கெட்ட ஓர் ஆனந்த விகடன் ஊடகவியலாளனின் பதிவு இது. இத நம்பாதீங்க.
பார்க்க http://aruliniyan.blogspot.com/2012/07/blog-post.html
உணர்சிகளால் ஆக்கப்பட்டவன் தான் மனிதன் ,அவன் உணர்சிகளின் மொத்த வடிவம் இதற்கு நானும் விதி விலக்கு அல்ல,எனது கடைசி ஜே பி எல் சம்பந்தமான பதிவில் நான் உணர்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டேன் என நான் நேசிக்கும் , என்னை நேசிக்கும் நண்பர்கள் கவலை தெரிவிகின்றனர்,உண்மையாகவும் இருக்கலாம் , ஏன் என்றால் நான் பதிவை எழுதும் கணத்தில் செம கொதிப்பில் இருந்தேன்,என்னைத் தொடர்பு கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய பத்திரிகையின் நிருபர் ஒருவர் பின்வருமாறு கேட்டார்
யாழ்ப்பாணத்தின் பிரபலமான இந்துக் கல்லூரியில் அண்மையில் பெரும் பாலான யாழ்ப்பாண பெண்கள் அரை குறையாக ஆடினார்களாமே
உண்மையா பிரதர்............?
எனக்கு ஏதோ எனது பிறப்பையே யாரோ சந்தேகித்து கேள்வி கேட்டது போல இருந்தது...
கடுப்பாகி உணர்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்த நான்,கூற வந்த வாதத்தை சரியான முறையில் முன்வைக்கவில்லை என்பது எனது நெஞ்சில் அழுத்தும் ஒரு முள்ளு [கருணாநிதி ஸ்டைலில்]
சிலர் என்னை கலாச்சாரக் காவலன் ஆக்கும் உந்துதலில் உள்ளனர் என்பது எனது சிற்றவுக்கு எட்டுகிறது,என்னை யு கே இல் இருந்து தொடர்பு கொண்ட ஒரு அன்பர்
உங்களைப் போல அனைவரும் கலாசாரம் மேல் பற்று உடையவர்களாக இருந்தால் எங்கள் கலாச் சாரத்தை யாராலும் அசைச்சுக்க முடியாதுடா அசைச்சுக்க முடியாது டா அசைச்சுக்க முடியாதுடா என கூறி இருந்தார்,
மேலும் ஒரு அன்பர் ஜே பி எல் இல் நடை பெற்ற கலாசார சீரழிவுகளை நீங்கள் வெளிப்படுத்தியது போல யாழ்ப்பாணத்தில் நடக்கும் அனைத்து சீரழிவுகளையும் வெளிக்கொணர வேண்டும் எனவும் அதன் முதல் படியாக யாழ்ப்பாணம் வடமராட்சியின் பாடசாலை ஒன்றில் அதன் அதிபருக்கும் , அங்குள்ள பெண் ஆசிரியருக்கும் இடையான கள்ளக் காதலை நீங்கள் உங்கள் ப்ளாக் மூலம் உலகறியப் பண்ண வேண்டும் என்று கேட்ட கணத்தில் எனக்கு எனது எழுத்தின் பிறப்பு மேலேயே பெரிய சந்தேகம் வந்தது.நான் எழுத வந்தது வேறு காரணத்துக்காக, சிவ சத்தியமாக கலாச்சாரத்தை காப்பாற்ற அல்ல ,
போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர்,ஆங் கிலேயரால் அழிக்க முடியாத எமது கலாச்சாரத்தை யாராலும் அழிக்க முடியாது பாஸ்
,விட்டால் பய புள்ளைகள் எனது ப்ளாக்கை மயிர் புடுங்கி இணையதளம் போல ஆக்கி விடுவார்கள். நான் பொழுது போக்கிற்க்காக எழுத வந்தவன் அல்ல ,எழுத்து எனது பஸன்,அதன் மேல் நான் கொண்ட காதலை நான் வார்த்தைகளால் விளக்க முடியாது
சரி நான் ஏன் நடந்து முடிந்த 2012 ஜே பி எல் லை
எதிர்கிறேன்.....?
இதற்கு விரிவான விளக்கம் கொடுக்க வேண்டியது எனது கடமை ,என்னையும் ஒரு "அப்பாடக்கர்" என நினைத்து நான் கிறுக்கும் பதிவுகளை நேரம் செலவழித்து வாசிக்கும் நண்பர்களுக்கு நான் எந்த வித ஏமாற்றமும் கொடுக்க விரும்பவில்லை ,நடந்து முடிந்த ஜே பி எல் லை நான் கடுமையாக எதிர்க்கிறேன் அதற்கான காரணங்களை விரிவாக பட்டியல் இடுகிறேன்,ஒன்றாக எழுதினால் வாசிக்க போரடிக்கும் என்பதால் பிரித்து எழுதுகிறேன் Just Bear With Me...
காரணம் ஒன்று.....
1]ராணுவப் பிரசன்னம்
எமது போராட்டம் தோற்றதுக்கு மூல காரணம் நாமும் நமது தலைவர்களும் தான்.எமது முழு ஆதரவுடன் எமது தலைவர்கள் செய்த தவறுகளும் கூடவே சர்வதேசத்தின் தவறுகளும் சேர்ந்து முள்ளி வாய்காலில் போய் விடிந்தது.நாம் செய்த தவறுகளால் ஒரு சுப முகூர்த்தத்தில் எமது போராட்டம் முடிவுக்கு வந்து இன்டெர்நேஷனல் லெவெலில் நோண்டியாகி விட்டது. விடுதலைப் புலிகள் தவறு விட்டார்கள் என்பது அடிப்படை That doesn't sound இலங்கை ராணுவம் வெற் றிலைக் காம்பும் கடிக்க தெரியாத ,விரல் சூப்பும் குழந்தைகள் என்று...
இலங்கை ராணுவம் ஒரு பாரிய தவறை ,மிகப் பெரிய கிரிமினல் குற்றம் ஆன "இனப் படுகொலையை" செய்த மிலேட்ச்சத் தனமான ஒரு ராணுவம்.ராணுவத்தில் இருப்பவர்களும் சரி அதை வழி நடத்துபவர்களும் சரி இனப் படுகொலைக்கு சர்வதேசத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள்.அதில் இருந்து அவர்கள் தப்ப முடியாது,மகிந்த ராஜபக்ஷவையும் அவரின் இராணுவத்தையும் சர்வதேசம் முன்பு தூக்கில் இடுவோம் என நான் பழ நெடுமாறன் ,வைகோ போல காமெடி பண்ண வரவில்லை, ஆனால் அவர்கள் செய்த குற்றம் மனித குலத்துக்கு எதிரானது , மனித குலத்தால் மன்னிக்க முடியாத குற்றம்,ஹிட்லர் யூதர்கள் மீது செய்த இனப் படுகொலைக்கும் ஈழத்தமிழர்கள் மீது மகிந்தவும் அவரின் ராணுவமும் செய்த இனப் படுகொலைக்கும் வித்தியாசம் இல்லை, ஆண்டுகள் தான் வித்தியாசப் படுகிறது. பழசை மறந்து மீண்டும் கை கோர்ப்போம் , Fuck It And Just Move On என்பது எல்லாம் சிங்கள மக்களுக்கு பொருந்தும் ஆனால் ,இலங்கை ராணுவத்துக்கு பொருந்தாது.
இனப் படுகொலையை பேசாமல் "தேமே" என வேடிக்கை பார்த்த சிங்கள மக்களுடன் நாம் எப்படி ஒன்றிணைவது என யாராவது கொந்தளித்தால்,அதற்கான பதில் எமது பிரதேசத்தில் இனப் படுகொலை நடந்தது என்கிற விடயமே பெரும் பாலான சிங்கள மக்களுக்கு தெரியாது.அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் LTTE யினர் பயங்கரவாதிகள் என்பது தான்.அதற்கு தோதாக நாமும் எமது போராட்டத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாகத்தான் சிங்கள மக்களிடம் கொண்டு போய் சேர்த்து உள்ளோம்.
ஆனையிறவில் குண்டு வெடித்தால் அடுத்த நிமிடமே கொழும்பில் குண்டு வைப்போம்
என எமது தலைகள் கிளம்பியது தான் எமது நீதிக்கான போராட்டத்தை ஒடுக்கி சர்வதேசம் முன்பு பயங்கரவாதம் ஆக்கியது. சிங்கள மக்களுக்கு எமது போராட்டத்தின் நீதியையோ ,அதன் வலியையோ ,எமது பிரதேசத்தில் நடந்த படு கொலைகளையோ எமது ஊடகங்கள் சரியான முறையில் கொண்டு செல்லவில்லை,"தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகளை" ஒளி பரப்புவதிலேயே அவர்களின் காலம் சென்றுவிட்டது.சிங்கள நண்பர்களுடன் பழகியவன் எனும் விதத்திலே ஒன்று என்னால் கூறமுடியும் ,அவர்களுக்கு எமது பிரதேசத்தில் நடந்த இனப் படுகொலை சம்பந்தமாக எதுவும் தெரியாது ,சண்டையில் கிழியாத சட்டை எங்கு இருக்கு ரேஞ்சில் கடைசி யுத்தத்தில் சுமார் ஆயிரம் வரையான தமிழர்களே இறந்துள்ளார்கள் என நம்பிக்கொண்டு உள்ளனர்.அவர்களின் நம்பிக்கைக்கு எமது ராஜதந்திரம் இன்மையும் ஒரு காரணம்,சிங்கள மக்களுடன் நாம் திறந்த மனதுடன் மூவ் பண்ணித்தான் ஆக வேண்டும்,கோதாரி தமிழ் தேசியம் பேசுவதை விடுத்து சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை கொண்டு செல்வதுதான் மிகச் சிறந்த நெக்ஸ்ட் மூவ் ஆக இருக்கும்.
சிங்களவர்களின் புறக்கணிப்புக்கு நாமும் தான் காரணம்,ஸோ நான் அவர்களை இங்கே விமர்சிக்க முன்வரவில்லை.
ஆனால் சிங்கள ராணுவம் இனப் படுகொலை செய்த ராணுவம்.சிங்கள மக்களுடன் மூவ் பண்ணுவது போல ஜஸ்ட் லைக் தட் சிங்கள இராணுவத்திடம் மூவ் பண்ண முடியாது.அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டாலும் அவர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் நியாயப் படுத்துவதற்கு நாம் உடந்தையாக இருக்கக்கூடாது.
இங்கே நடந்த ஜே பி எல் என்பது முழுமையான ராணுவப் பிரசன்னத்துடன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ,இதற்குப் பின்னால் இருப்பது அரசாங்கத்தின் பக்கா "அஜன்டா" ,அதாவது இனப் படுகொலை செய்த ஒரு இராணுவத்தையும் எமது அடுத்த இளம் சந்ததியையும் ஒன்றிணைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் எமது அடுத்த இளம் சந்ததியை Convince பண்ணுவதன் மூலம்
"நான் சஞ்சய் ராமசாமியை லவ் பண்ணலப்பா"
ரேஞ்சுக்கு "ஈழத்தில் இனப் படுகொலையே நடக்கலப்பா" என சர்வதேசத்துக்கு காட்டுவதன் ஆரம்பம் தான் இந்த ஜே பி எல் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.சில விடயங்களை நாம் ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டும் ,எமது அடுத்த இளம் சந்ததியும் ராணுவமும் ஜே பி எல் போன்ற சில காரணிகளால் ஒன்றிணைந்து ஒரு புரிந்துணர்வு ஏற்படும் போது காலப் போக்கில் ஈழத்தில் இனப்படுகொலையே நடக்கவில்லை என எமது அடுத்த சந்ததியே வாதிடும் நிலை வரும் ,வரக் கூடாது எனில் ஆரம்ப நிலை எதிர்ப்பு மிக மிக அவசியம் ,அதைத்தான் நான் செய்தேன்.
"எமது தாயை தங்கையை கற்பழித்துக் கொன்ற சிங்களப் பேரினவாதத்துடன் கூட்டா" என்று எல்லாம் உணர்ச்சி வசப்படாமல் அறிவு ரீதியாக பார்த்தால் இராணுவத்துடன் நாம் காட்டும் நெருக்கம் நாம் பெறப் போகும் நீதிக்கு , எமது சந்ததியின் முன் னேற்றத்துக்கு தடையாகவே அமையும் , நாம் உடனடி நீதி பெற முடியாவிட்டாலும் ஒரு நாள் நாம் நீதி பெறலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நீண்ட நாள் காத்திருப்பு.காத்திருப்பதுடன் மாத்திரம் அல்லாது எமது அடுத்த சந்ததியை அடிப்படைகளில் இருந்து கட்டி எழுப்ப வேண்டிய சமுதாயக் கடமை ஒவ்வொரு வளர்ந்த ஈழத் தமிழனுக்கும் உண்டு.இதற்கு அண்மைக் கால மிகச்சிறந்த உதாரணமாக என்னால் மியன்மாரின் ஆங் சான் சூகியை கூறமுடியும் ஆங் சான் சூகியின் நீண்ட காலக் காத்திருப்பு ஏறத் தாள பலித்து விட்டது.சுமார் இருவது வருடங்களாக அவர் வீட்டுச் சிறையில் தவம் போல செய்த காத்திருப்பு Finally Paid Off....
ஆங் சான் சூகி வீட்டுச் சிறையில் இருந்த போது எல்லாம் அவர் வார வாரம் மக்களுக்கு செய்த சொற்பொழிவுகள் மூலம் மக் களை இராணுவத்துடன் கலக்காமல் அவர்களின் தந்திரத்துக்கு பலியாகாமல் பார்த்தார்.மக்களையும் இராணுவத்தையும் ஒன்றிணைய அவர் விடவில்லை ,சுமார் இருவது வருடங்களாக சர்வ பலத்துடன் ஆட்சி செய்த இராணுவத்தால் நாட் அட் ஆல் மக்கள் மனதை வெல்ல முடியவில்லை.மக்களின் மனதை வெல்ல ராணுவம் நடாத்திய சர்கஸ்கள் எல்லாம் சுத்தமாய் வொர்க் அவுட் ஆகவில்லை.
பர்மாவையும் ஈழத்தையும் முழுமையாக ஒப்பிட முடியாது தான் ஆனால் அவர்களிடம் இருந்து நாம் தெளிவாக படம் கற்றுக் கொள்ளலாம்,நாம் பழசை மறந்து அடுத்த கட்டத்துக்கு போக வேண்டியவர்கள்,அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை ,ஆனால் நாம் ஈழத்தில் நடந்த இனப் படுகொலையை மறக்க முடியாது ,மறக்க கூடாது.எமக்கு நீதி கிடைக்கும் வரை இராணுவத்துடன் நாம் இணைந்து பணியாற்ற முடியாது என்பது யதார்த்தம்.
காரணம் இரண்டு
2]நடனப் பெண்கள்
எமது கலாச்சாரம் என்பது பாரிய உட்கட்டமைப்புகளை உடையது,ஜஸ்ட் நடனப் பெண்கள் என்பவர்களால் எமது கலாச் சாரத்துக்கு எந்த வித பெரிய சேதமும் வராது.நான் நடனப் பெண்கள் எனும் புதிய கலாசாரத்தை கடுமையாக எதிர்க்க காரணம் அதற்குப் பின்னால் உள்ள ஆணாதிக்கம்,இயற்கையாக பெண்களை விட பலமான ஆண்கள் தமது அடக்குமுறைகளை பிரயோகித்து பெண்களை காலத்துக்கு காலம் அடக்கி வைத்திருக்கவே விரும்புகின்றனர்.இது வளர்ந்த , வளர்கின்ற ,வளரப் போகின்ற அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் , கூடவே அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.
இந்து மதத்திலே பெண் அடிமைத்தனம் என்பது காலம் காலமாக இருந்து வந்துள்ளது,தேவதாசிகள் எனும் பெயரில் கோவிலுக்கு நேர்ந்து விட்ட பெண்கள் உணர்வு ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அடக்கப்பட்ட கொடுமை சுமார் அரை நூற்றா ண்டுகளுக்கு முன்பு கூட தமிழர் வாழும் பிரதேசம் எங்கும் காணப்பட்டது,அதன் ஒரு தொடர்ச்சியாக தான் நான் இந்த நடனப் பெண்களைப் பார்க்கிறேன்.பெண்களை காட்சிப் பொருளாகப் பாவித்து நடனம் ஆட விடுவது என்பது ஆணாதிக்க மனநிலையின் ஒரு வக்கிர வெளிப்பாடு.பெண்களின் கவர்ச்சியை காட்சிப் பொருளாக பாவித்து கூட்டம் சேர்க்கும் கேவலத்தை நான் எங்கு சொல்லி அழ.தேவதாசிகளுக்கு பிறகு பெண்களை காட்சிப் பொருளாக பாவிக்கும் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் பெரிதாக நடக்கவில்லை ,ஆனால் நடந்திடுமோ என பயமாய் இருக்கு [அலைபாயுதே ஸ்டைல்] ஏன் என்றால் இந்த ஜே பி எல் நடன மங்கைகள் என்பது ஒரு புதிய ஆரம்பம்.ஒரு படு பிழையான கேவலமான முன் உதாரணம்,இந்த ஜே பி எல் லை தொடர்ந்து வெறும் சில கழகங்களும் அமைப்புகளும் நாங்களும் ஏன் பெண்களை கொண்டு வந்து நடனம் ஆட வைக்கக் கூடாது என்கிற உந்துதலை தரவல்ல ஒரு மிக மிகக் கேவலமான முன்னுதாரணம்,நடனப் பெண்கள் எனும் பெண்களை Sex Object ஆக மாத்திரம் பார்க்கும் இந்த கேவலமான புதிய கலாச்சாரத்தை நான் கடுமையான வார்த்தைகளால் எதிர்த்தேன் எதிர்க்கிறேன்,இன்னும் ஒரு முறை நடனப் பெண்களை கொண்டு வந்து ஆட்டம் போட்டால் இன்னும் கடுமையாக எதிர்பேன்.
நான் யாருக்கும் பயப்படல........[இளைய தளபதி விஜயின் குரலில் வாசிக்கவும்]
நடனப் பெண்களில் என்ன தவறு என லோ பேசுபவர்களிடம் நான் முதலில் கேட்ட அதே கேள்வியை தான் கேட்கிறேன்
உங்களின் அக்கா தங்கைகளை ஆட விடுவீர்களா.................?
எனக்கு வந்த இரத்தம் மற்றவனுக்கு வந்தா தக்காளிச் சட்னியா......?
காரணம் மூன்று
3] உள் அரசியல்
இலங்கையின் அரசியல் யாப்பை பொறுத்த வரை பதின் எட்டு வயது நிரம்பிய,மூளை விருத்தி அடைந்த ,புத்தி சுவாதீனமான யாருமே அரசியலில் இறங்கி ஓட்டுக் கேட்கலாம் , ஒப் கோர்ஸ் அது அவர்களின் உரிமை , அதில் நான் தலையிட விரும்ப வில்லை,ஆனால் அரசியல் செய்வதற்கு சில ஒழுங்கு முறைகள் உள்ளது , சிலரின் தனிப்பட்ட அரசியல் அபிலாசைகளுக்கு யாழ் இந்துக் கல்லூரியை களமாகப் பாவிப்பதை தான் நான் கடுமையாக எதிர்கிறேன்,இந்துக் கல்லூரிக்கு இருக்கும் பழம் பெருமைகளை பாவித்து தானும் அரசியல்வாதியாகலாம் என்பது கண்டிக்கப்படவேண்டியது,ஜே பி எல் என்பது அவர்கள் கூறுவது போல எமது இளம் சந்ததியின் விளையாட்டுத் திறமைகளை வெளிக் கொணர உள்ளார்ந்த இதய சுத்தியுடன் ஆரம்பிக்கப்பட்டதாக நான் நினைக்க வில்லை இந்த ஜே பி எல் இற்கு பின்னால்,"மீன் போட்டு சுறா பிடிக்க" நினைக்கும் அரசியல் உள்ளது,
அதாவது வோட் போடும் வயதுடைய அல்லது இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் "வோட்" போடும் வயதை அடையப் போகும் வாலிபர்களை இலக்கு வைத்து வெறும் வாக்கு வேட்டைக்காகத்தான் இந்த ஜே பி எல் நடத்தப்பட்டது,
ஆதாயம் இல்லாமல் ஒருநாளும் யாவரி ஆற்றோடு போக மாட்டான் மக்களே ,
கிரிக்கெட் இல் மிகப் பெரிய எதிர்காலம் தரப் போவதாக பீலா விட்டு விட்டு தமது அரசியல் அபிலாசைகள் தீர்ந்தவுடன் அவர்களை அம்போ என கழட்டி விடும் காலம் வரும்,நான் அவர்களின் அரசியல் அபிலாசை களுக்கு எதிரி அல்ல ,ஆனால் அவர்கள் தங்களின் அரசியலுக்கு எமது இளம் சந்ததியையோ அல்லது யாழ் இந்துக் கல்லூரியை யோ ஒரு உபகரணமாகப் பாவிப்பதை நான் இருக்கும் வரை நான் எதிர்பேன்.
போர் தின்ற பூமியில் வாழும் எம் மக்களுக்கு மாற்றம் என்பது உடனடி தேவை ,ஆனால் அந்த மாற்றம் நடனப் பெண்கள் அல்ல .
யாழ்ப்பாணத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என வலன்டியறாகக் கிளம்பும் சிலரைப் பார்க்கும் போது ஒரு கதை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது ,
ஒரு அம்மாவிற்கு ஒரு பையன் இருந்தானாம் அவனுக்கு பிறந்ததில் இருந்து வாய் பேச முடியாதாம்,எவ்வளவோ செலவுகள் பண்ணி மருத்துவம் பார்த்து கடைசியில் அவன் பேசக் கூடிய நிலையை அடைந்தானாம்,அவன் பேசப் போகும் முதல் வார்த்தைக்காக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில் ,அவன் தனது விதவை சித்தியைக் காட்டி ,அம்மாவிடம் கேட்டானாம்
அம்மா,நீ யும் எப்ப சித்தி போல ஆகுவாய்...?,அதை நான் பார்க்கணும்..
இந்தக் கதை போல தான் எனக்கு இருக்கு இந்த ஜே பி எல் லும்..
முக்கிய குறிப்பு:இந்தப் பதிவு எனது பதிவையும் நேரம் செலுத்தி வாசிக்கும் எனது வாசக நண்பர்களுக்காகக் மாத்திரம் தான் எழுதப்பட்டது,என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி மெயில் பண்ணும் அனபர்களுக்கு எழுதப்பட்டது அல்ல, அவர்கள் எல்லாம் "பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்" என்கிற பேசிக் அண்டர்ஸ்டான்டிங் எனக்கு இருக்கு.ஒரு அன்பர் எனது உடல் உறுப்பில் ஒன்றை வெட்டி எடுத்து காக்கைக்கு உணவாகப் போட வேண்டும் என ஆசைப்பட்டு இருந்தார் ,அவரின் ஆசையில் மண் விழ
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , ராணுவப் பிரசன்னம் நீக்கப்பட்டு,உள் அரசியல் முழுமையாக நீக்கப்பட்டு,நடனப் பெண்கள் நீக்கப் பட்டு உண்மையாக இதய சுத்தியுடன் எமது அடுத்த சந்ததியின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தும் விதத்தில் அடுத்த ஜே பி எல் இருந்தால் அதைப் பாராட்டி எழுதும் முதல் ஆளாக நான் இருப்பேன்,மாறாக மேற்கூறியவை மீண்டும் இருக்கும் பட்சத்தில் ஜே பி எல் லைஇன்னும் கடுமையாக எதிர்பேன்.









